புதிய ஆத்திசூடி

புதிய ஆத்திசூடி

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பல புரட்சிகரமான கருத்துக்களை தமது பாடல்களின் மூலம் எடுத்துரைப்பதில் வல்லவர். ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியை போல  புதிய சிந்தனையுடன் புதிய ஆத்திச்சூடியை இருபதாம் நூற்றாண்டில் இயற்றினார்.


கடவுள் வாழ்த்து
ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

உயிர் வருக்கம்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சி கொள்
ஒற்றுமை வலியமாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை

ககர வருக்கம்
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றேன நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கைக் கொண்டு வாழ்
கௌவியதை விடேல்

சகர வருக்கம்
சரித்திர தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையிற் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம் தனை இகழ்
சௌரியந் தவறேல்

ஞகர வருக்கம் 
ஞமிலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வத தருளின்
ஞேயங் காத்தல் செய்

தகர வருக்கம்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்று வாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி

நகர வருக்கம்
நன்று கருது
நாளெல்லாம் வினை செய்
நினைப்பது முடியும்
நீதி நூல் பயில்
நுனி அளவு செல்
நூலினை பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்

பகர வருக்கம்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடம் கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு

மகர வருக்கம்
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடம் கொடேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவம் செய்
மோனம் போற்று
மௌட்டியந் தனைக் கொல்

யகர வருக்கம் 
யவனர் போல் முயற்சி கொள்.
யாவரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.

ரகர வருக்கம் 
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்று உணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்ரம் பழகு
ரௌத்ரம் பழகு

லகர வருக்கம் 
லவம் பல வெள்ளமாம்
லாவகம் பயிற்சி செய்
லீலை இவ்வுலகு
(உ)லுத்தரை இகழ்
உ)லுத்தரை இகழ்
லௌகிகம் ஆற்று

வகர வருக்கம் 
வருவதை மகிழ்ந்துண்
வான நூல் பயிற்சி கொள்
விதையினைத் தெரிந்து இடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமை செய்
வையத் தலைமை கொள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்