நல்லூர்க் கந்தசாமி ஆலயம்
ஈழத்தில் உள்ள புகழ் பெற்ற முருகன் ஆலயங்களின் நல்லூர்க் கந்தசாமி கோவிலும் ஒன்றாகும். ஆரியச் சக்கரவத்திகளின் வழிபாட்டிற்குரிய கோயிலாக இவ்வாலயம் திகழ்ந்துள்ளது. கோட்டை இராச்சியத்தை ஆண்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் மகனாகிய செண்பகப் பெருமாள், யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அவனுடைய காலத்திலேயே நல்லூர்க் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது.
சிங்கைப் பரராசசேகரன் தனது ஆட்சிக்காலத்தில் நல்லூர்க் கந்தசாமி ஆலயத்தை நடுநாயமாகக் கொண்டு, நான்கு எல்லைகளிலும் நான்குகோயில்களைக் கட்டினான்.
- சட்டநாதர் கோயில் - வடக்கு
- வெயிலுகந்த விநாயகர் கோயில் - கிழக்கு
- கைலாசநாதர் - தெற்கு
- வீரமாகாளி - மேற்கு
அத்துடன் நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குச் சமீபமாக ஓர் ஏரியை அமைத்தான். யமுனா தீர்த்தத்தைக் கொண்டு வரவைத்து அந்த ஏரியில் கலந்து அதற்கு யமுனா ஏரி எனப்பெயரிட்டான். அது மருவி யமுனாரி என ஆயிற்று.
நல்லூர்க் கந்தசாமி கோயில் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக் கேயரால் அழிக்கப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சியில் அரசாங்க உத்தியோகத்தராக இருந்த இரகுநாதமாப்பாண முதலியார் என்பவர், அரசிடமிருந்து நிலத்தை வாங்கி, அதில் ஆலயத்தைப் புதிதாகக் கட்டினார். மன்னர்களால் போற்றப்பட்டுவந்த மூலவிக்கிரகத்துக்குப் பதிலாக வேல் ஒன்றினை மூலமூர்த்தியாகக் கொண்டு ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது.
ஆலயத்திற்குத் தெற்கே தீர்த்தக்கேணி அழகுற அமைந்துள்ளது. நல்லூர்க் கந்தனுக்கு புலவர்கள் பலர் பிரபந்தங்கள் பாடியுள்ளனர். இவ்வாலயத்தின் சிறப்பு நித்திய, நைமித்திய பூசைகள் காலந்தவறாது நடைபெறுகின்றமை ஆகும்.
இங்கு ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்கள் மகோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.
Nallur Kanthasamy Kovil |