வணக்க முறைகள்

Vanakkamuraikal

வணக்க முறைகள்

இறைவன் சன்னிதானத்தில் இறைவனை வணங்கும் முறைகளை ஐந்தாக வகைப்படுத்தலாம்.

ஏகாங்கம்

தலையை மட்டும் தாழ்ந்து பணிந்து வணங்குதல்.
பெரியவர்களைக் கண்டாலும் இவ்வணக்கத்தைச் செய்யலாம். இது இருபாலாரும் செய்யக் கூடியது.

துவியாங்கம்

சிரசில்(தலையில்) வலக்கையை மட்டும் வைத்து வணங்குதல்.
இது இருபாலாரும் செய்யக் கூடியது.

திரியாங்கம்

சிரசில் இருகைகளையும் குவித்து வணங்குதல்.
கோபுரத்தைக் கண்டதும் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இது இருபாலாரும் செய்யக் கூடியது.

பஞ்சாங்கம்

தலை
இருகை
இரு முழந்தாள்
எனும் ஐந்து உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குதல்.
இது பெண்கள் மட்டும் செய்யலாம்.

அஷ்டாங்கம்

தலை
இருகை
இருசெவி
இருபுயம்
மேவாய்
எனும் எட்டு அங்கங்கள் நிலத்தில் பொருந்த வணங்குதல்.
இது ஆண்கள் மட்டும் செய்யலாம்.

இவற்றில் பஞ்சாங்க வணக்கமும், அட்டாங்க வணக்கமும் விரும்பத்தக்கது. வணங்கும் போது மேற்கு அல்லது தெற்கில் கால்களை நீட்ட வேண்டும். கொடி தம்பத்திற்கு முன்பாக விழுந்து வணங்குதல் வேண்டும். கொடி மரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் கூடாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்