கடவுள்

🛕 கடவுள் – தத்துவ விளக்கம்


கடவுள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவன், ஆண்டவன், பசுபதி, பரம்பொருள் என்பன அவற்றுள் சிலவாகும். இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு:

  • 🔹 சொரூபலக்கணம்
  • 🔹 தடத்தலக்கணம்

✨ சொரூபலக்கணம்

இது இறைவனுக்கு உரிய சிறப்பியல்பாகும். இந்த நிலையில் இறைவனுக்கு பெயர், குணம், குறி எதுவுமில்லை. இது மனம், வாக்கு, காயம் ஆகியவற்றிற்கும் எட்டாத நிலையாகும்.

இந்நிலையில் உள்ள இறைவனை நாம் பரமசிவம் என்று குறிப்பிடுகிறோம். இது கடவுளின் ஆனந்தமயமான நிலையாகும்.

🔱 தடத்தலக்கணம்

இறைவன் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் நோக்கில் பல நிலைகளில் வெளிப்படுகின்றார். இந்நிலையில் குணம், குறிகள் காணப்படும். அருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவங்களில் அருள் புரிகின்றார்.

🌟 எண்குணங்கள்

  • தன்வயத்தினராதல்
  • தூயவுடப்பினனாதல்
  • இயற்கையுணர்வினனாதல்
  • பாசங்களிலிருந்து நீங்குதல்
  • பேரருளுடைமை
  • வரம்பிலின்பமுடைமை
  • வரம்பிலாற்றலுடைமை
  • முற்றுமுணர்தல்

🔥 ஐந்தொழில்கள்

தடத்த நிலையில் கடவுள் ஆன்மாக்கள் முத்தி பெறுவதற்காக ஐந்து தொழில்களை ஆற்றுகிறார்:

  • 🟢 படைத்தல் – பிரம்மா
  • 🔵 காத்தல் – விஷ்ணு
  • 🔴 அழித்தல் – உருத்திரன்
  • 🟣 மறைத்தல் – மகேசுவரன்
  • 🟡 அருளல் – சதாசிவன்

🌿 ஆன்மா & கடவுள் உறவு

கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் ஆழமான தொடர்பு உள்ளது. இரண்டும் அநாதியானவை. ஆன்மா பாவங்களில் இருந்து நீங்கி இறை அருளைப் பெற்றே முத்தியடையும்.

முத்தி நிலையில், ஆன்மா இறைவனுடன் இணைந்து ஆனந்த நிலையை அடைகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்