Thiruvilakku
வீட்டில் ஏற்றப்படும் திருவிளக்கே இலட்சுமியின் கடாட்சமாகும். மாலை ஆறு மணிக்கு வீட்டின் பின்கதவைச் சாத்திவிட்டு முன்கதவைத் திறந்து; வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு வீட்டில் விளக்கு ஏற்றப்படுகின்றது. இதன் பொருள் முன் வாசல் வழியாக வரும் இலட்சுமி பின் வாசல் வழியாகச் சென்று விடக் கூடாது என்பதாகும். தீபம் ஏற்றிய பின், பின் கதவு திறக்கப்படலாம். அதாவது இலட்சுமி தீப ஒளியாக வீட்டில் திகழ்கிறாள்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
திருநாவுக்கரசர்
தீபமும் திசைகளும்
கிழக்கு | துன்பம் நீங்கும், பீடைகள் அகலும், சகல சம்பத்தும் உண்டாகும் |
மேற்கு | கிரக தோஷம், பங்காளிப்பகை நீங்கும் |
வடக்கு | திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும் |
தெற்கு | தெற்குப் பார்த்துத் தீபம் ஏற்றக்கூடாது |
விளக்கு ஏற்ற உகந்த எண்ணை
நெய் | சகல செல்வமும் பெருகும். |
நல்லெண்ணெய் | எல்லாப் பீடைகளும் விலகும். யமபயம் இருக்காது |
இலுப்பை எண்ணெய் | ஆரோக்கியம் உண்டாகும் |
ஆமணக்கு எண்ணெய் | சகல சம்பத்தும் உண்டாகும் |
விளக்கு எண்ணெய் | சகல சம்பத்தும் உண்டாகும் |
ஐந்து வகை எண்ணெய் | நெய், விளக்கெண்ணை, வேப்பெண்ணை, இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தும் விளக்கில் ஊற்றி ஒரு மண்டலம்(45 நாட்கள்) பூஜை செய்தால் தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும். |
கடலை எண்ணெயில் விளகேற்றக் கூடாது.