Panchankam
பஞ்சாங்கம் என்பது வானியல் அடிப்படையிலான கால அட்டவணை ஆகும். காலநேரங்களை அறிந்து கொள்வதற்கும், சோதிட கணிப்பீடுகளுக்கும் இந்துக்கள் பஞ்சாங்கத்தையே பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலத்திலேயே முனிவர்கள் தமது ஞானத்தால் கிரகங்களின் போக்குகளை துல்லியமாகக் கணித்துள்ளார்கள். அவ்வறிவின் பெறுபேறுகளின் ஒன்றே பஞ்சாங்கமாகும்.
பஞ்சாங்கம் என்றால் (பஞ்ச + அங்கம்) ஐந்து உறுப்பு என்று பொருள்படும்.
அந்த ஐந்து அங்கங்களும்
- வாரம்
- திதி
- நட்சத்திரம்
- கரணம்
- யோகம்
என்பன ஆகும்
வாரம்
வாரம் என்பது ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு தினங்களைக் குறிக்கின்றது. வாரம், கிழமை என்பன உரிமை என்று பொருள்படும்.
ஞாயிறு | சூரியன் |
திங்கள் | சந்திரன் |
செவ்வாய் | செவ்வாய் |
புதன் | புதன் |
வியாழன் | குரு |
வெள்ளி | சுக்கிரன் |
திதி
திதி என்பது பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் சுற்றுப் பாதையின் முப்பது சம பிரிவு ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் கால அளவைக் குறிக்கும். சந்திரனின் சுற்றுப் பாதை சுக்கில பட்சம் (வளர்பிறை), கிருஷ்ண பட்சம்(தேய்பிறை) என்னும் சம அளவுள்ள இரு பக்கங்களைக் கொண்டது.
அமாவாசை |
பூரணை |
வளர்பிறையில் பதினான்கு நாட்கள் |
தேய்பிறையில் பதினான்கு நாட்கள் |
திதிகள் மொத்தம் முப்பது நாட்கள் |
நட்சத்திரம்
ரவிச் சக்கரம் ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவிலான இருபத்தேழு பகுதிகளாக அமைந்துள்ளன. பூமியைச் சுற்றிவரும் சந்திரன் குறித்த நேரத்தில் அந்த இருபத்தேழு பகுதிகளில் எப்பகுதிக்குள் நிற்கின்றதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அக்குறித்த நேரத்திற்குரிய நட்சத்திரமாகும். நட்சத்திரம் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு ஆகும்.
- அஸ்வினி
- பரணி
- கார்த்திகை
- ரோகிணி
- மிருகசீரிஷம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- ஹஸ்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுசம்
- கேட்டை
- மூலம்
- பூராடம்
- உத்திராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
கரணம்
கரணம் என்பது திதியின் அரைப்பங்காகும். ஒரு திதியின் முற்பாதி ஒரு கரணமும் பிற்பாதி மற்றொரு கரணமும் ஆகும். ஆகவே கரணங்கள் அறுபது ஆகும்.
யோகம்
சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். அகவே இருபத்தேழு நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பகுதியாக இருபத்தேழு யோகங்கள் அமைகின்றன.
இரண்டு வகையிலான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன.
- வாக்கிய பஞ்சாங்கம் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகள் அருளிய முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதுவது)
- திருக்கணித பஞ்சாங்கம் (சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்கநிலை வித்தியாசத்தை கணக்கிலெடுத்து எழுதப்படுவது)