Nayinai Naagapoosani Amman Aalayam

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்

  • யாழ்ப்பானக் குடா நாட்டின் தென்மேற்காக உள்ள தீவுகளில் ஒன்று நயினாதீவு.
  • இத்தீவை நாகதீபம், மணிபல்லவம், மணித்தீவு, பிராமணத்தீவு என்றும் அழைப்பர்.
  • இத் தீவிலேயே நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
  • இங்குள்ள இறைவியை நாகபூசணி, நாகம்மாள், நாகேஸ்வரி எனப் பல பெயர்களால் ஆழைப்பர்.
  • நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அறுபத்திநான்கு சக்திபீடங்களுள் ஒன்றாகும்.
  • முற்காலத்தில் வாழ்ந்த நாகர்கள் சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்டவர்கள். அவர்கள் அமைத்த ஆலயமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்.
  • வணிகன் ஒருவன் அம்மனுக்கு பூக்கொண்டுவந்த நாகத்தை கருடனிடமிருந்து காப்பாற்றினான். அதன் பயனாக பெரும் செல்வந்தன் ஆனான் . இது அம்மனின் அருளை உணர்ந்து அம்மனுக்குப் பெருங்கோயில் கட்டினான். கோயிற் பூசகராக நயினைப் பட்டரை நியமித்தான்.
  • ஆலயவிருட்சம் : வன்னி
  • தீர்த்தம் : சித்தாமிர்த புட்கரணி (மேற்கு)
  • மகோற்சவம் : 15 நாட்கள் (ஆனிப் பூரணை தீர்த்தம்)
  • கோயிலில் உள்ள மடத்தில் நித்தம் அன்னதானம் வழங்கப்படும். விசேடதினங்களில் அமுத சுரபி என்ற ஆலயத்தைச் சேர்ந்த மடத்தில் அன்னதானம் வழக்கப்படும்.





Nayinai Nagapoosani Sea View






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்