"பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு" சைவசமயத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள நூல்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் சிவபக்தியை உருவாகக் கூடிய பாடல்களால் ஆனவை. இந்நூல்கள் தமிழர்களின் பக்தி இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சைவநெறி, தமிழ் மொழி, இலக்கியம், மற்றும் இசை என நான்கு துறைகளின் வளர்ச்சிக்கும் பன்னிரு திருமுறைகள் ஆற்றிய பங்கு அளப்பெரியது.
இந்த தொகுப்பை 10ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி தொகுத்துள்ளார்.
தெய்வீக உணார்வு பெருக, சமய ஒழுக்கத்தைப் பேணும் நோக்கத்துடன் தொகுக்கப்பட்ட உயர்வான நூல்களின் தொகுதியே திருமுறைகளாகும். திருமுறைகளை தமிழ்வேதம், தமிழ்மறை எனவும் அழைப்பர்.
திருமுறைகளைத் தொகுத்தவர் :
நம்பியாண்டார் நம்பி
திருமுறைகளைத் தொகுப்பித்தவர் :
முதலாம் இராஜராஜ சோழன்
| திருமுறை | திருமுறையின் பெயர் |
ஆசிரியர் | ஆசிரியர் தொகை |
|---|---|---|---|
| 1 2 3 |
தேவாரம் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் |
1 |
| 4 5 6 |
தேவாரம் | திருநாவுக்கரசு நாயனார் |
1 |
| 7 | தேவாரம் | சுந்தரமூர்த்தி நாயனார் |
1 |
| 8 | திருவாசகம் திருக்கோவையார் |
மாணிக்கவாசக சுவாமிகள் |
1 |
| 9 |
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு |
திருமாளிகைத்தேவர் சேந்தனார் கருவூர்த்தேவர் நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தமநம்பி சேதிராயர் சேந்தனார் |
9 |
| 10 | திருமந்திரம் | திருமூலர் | 1 |
| 11 | 40 பிரபந்தம் |
திருவாலவாயுடையார் காரைக்காலம்மையார் ஐயடிகள் காடவர்கோன் சேரமான் பெருமாள் நக்கீரதேவர் கல்லாடதேவர் கபிலதேவர் பரணதேவர் இளம்பெருமானடிகள் அதிராவடிகள் பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பி |
12 |
| 12 | பெரியபுராணம் | சேக்கிழார் | 1 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்