🕉️ லிங்காஷ்டகம்
-
ப்ரஹ்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கமிலா சிவலிங்கம்
பிறவியின் துயரை நீக்கிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
அமரரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வகையறிவாகிய காரண லிங்கம்
சித்தரும் அனைவரும் போற்றிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் சூடிய லிங்கம்
தக்கனின் யாகம் அழித்திடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கய மாலையை சூடிய லிங்கம்
பொங்கிய வினைகளை நீக்கிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
தேவர்கள் அர்ச்சனை செய்திடும் லிங்கம்
தேடிடும் பக்தியில் சேர்த்திடும் லிங்கம்
சூரியன் கோடி அடங்கிய லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
எட்டுத் தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாமாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம் -
தேவரின் உருவில் பூசைகொள் லிங்கம்
தேவர்கள் பூமியில் பூசைகொள் லிங்கம்
பரமநாதனாய் பரவிடும் லிங்கம்
பாதம் பணிந்தேன் சதாசிவ லிங்கம்
🕉️ சிவனை தியானித்து இந்த லிங்காஷ்டகத்தை பக்தியுடன் பாடுவது ஆன்மிக அமைதியையும் அருளையும் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்