அபிராமியம்மை பதிகம்

🌺 அபிராமியம்மை பதிகம்


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வழமையும் குன்றாத இளமையும்
கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!

✨ 16 செல்வங்கள் பெறும் அருள்

இப்பாடலைப் பாடி அபிராமியம்மையை வழிபட்டால் 16 செல்வங்களையும் பெறலாம்

  1. 🌟 கலையாத கல்வி
  2. 🌟 குறையாத வயது
  3. 🌟 கபடு வராத நட்பு
  4. 🌟 குன்றாத வளமை
  5. 🌟 குன்றாத இளமை
  6. 🌟 கழுபிணியிலாத உடல்
  7. 🌟 சலியாத மனம்
  8. 🌟 அன்பகலாத மனைவி
  9. 🌟 தவறாத சந்தானம்
  10. 🌟 தாழாத கீர்த்தி
  11. 🌟 மாறாத வார்த்தை
  12. 🌟 தடைகள் வராத கொடை
  13. 🌟 தொலையாத நிதி
  14. 🌟 கோணாத கோல்
  15. 🌟 துன்பமில்லாத வாழ்வு
  16. 🌟 மிகுந்த இறையன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்